மார்ச் 24, 2000 - எனது டைரி குறிப்பிலிருந்து.. கூ.அன்பு
இன்று Ist MSC தந்த FAREWEL PARTY... காலை 11.30 மணியளவில் துவங்கியது.. MONOACTING விளையாட்டோடு துவங்கியது.. சுவையாய், கலகலப்பாய் இருந்தது. ஆனால் இதற்கெல்லாம் முன்பே தீபாவின் கேமராவை எடுத்த்துக்கொண்டு நூற்றாண்டு கட்டடத்துக்கு முன்(வணிகவியல் துறை) ஒரு குரூப் போட்டோ.. என் கழுத்தை அலங்கரித்தது சகியின் டாலர், தேவகியின் செயின். தேவகிக்கு விரைவில் நிச்சயம் செய்ய போகிறார்கள் என விஜி சொன்னது. அது நிஜமானால் கடவுளே அடுத்த பங்குனி உத்திரத்திற்கு வடசென்னிமலைக்கு நடந்தே வருகிறேன்.. அமைதியும், அன்பும் என் அன்புத் தோழியின் இயற்கை குணம்.
பின் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முன் 3 போட்டோக்கள் எடுத்தோம்.. “இன்னிக்காவது நல்ல dress போடக்கூடாதா அன்பு.. முதல்ல உங்க hair style-ல மாத்துங்க அன்பு”..-குண்டு விஜி!!
பின் Class-ல் விளையாட்டுக்கள் துவங்கின.. முதலாமாண்டு தோழர்களும், தோழிகளும் மிக சிறப்பாகவே இந்த பிரிவு உபசார விழாவை
ஏற்பாடு செய்திருந்தார்கள்...
ஒரு Box-ல் சிறு சிறு சீட்டுக்களில் என்ன செய்யவெண்டும் என எழுதிவைக்கப்பட்டது..முதலில் ரூபா.. அரசியல்வாதிபோல் வோட்டுக் கேட்கவும் என்று வர சுமாராய் நடித்து துவங்கி வைத்தார்..
பின் மஹேந்திரன்.. மூக்கைப் பிடித்துக் கொண்டே பாட்டுப் பாடவும் என்று வர அவன் என் மூக்கைப் பிடித்துக்கொண்டு “அதாண்டா இதாண்டா அருணாசலம் நான் தாண்டா” எனப் பாடிவிட்டு போனான்..
குண்டு விஜிக்கு டாக்டர் போல நடிக்கவும் என்று வர நான் நோயாளியாய் நடிக்க “டாக்டர்.. எனக்கு எயிட்ஸ்..” என்று ஒரு போடு போட்டேன்.. ஆடிப்போன விஜி அதட்டலாய் அறிவுரை கூறினார் உண்மையான டாக்டர் போலவே..
அடுத்து நான்.. பேராசிரியர்போல அறிவுரைக் கூறவும் என வர எனக்குதான் அது ஈஸியாச்சே.. GV Sir போல நடித்தேன்.. அப்படி ஒன்றும் சிறப்பாக வரவில்லை..
அதே நேரத்தில் மேகலாவும், சசியும் உள்ளே(அதுவும் சீலையில்..இது இரண்டாவது முறை) வர மேகலாவின் சவுரியை கிண்டல் செய்தார்கள்..
தேவகிக்கு நிருபர் போலா பேட்டி எடுக்கவும் என வர நடிகர் அஜித்கிட்ட பேட்டி எடுத்ததார்கள்(அஜித்- வேற யாரு.. கார்த்திக் தான்)
மேகலாவின் சப்பாணி நடிப்பு (ஆத்தா வையும், சந்தைக்கு போவுனும்.. காசு குடு..), ஓபுலட்சுமியின் இரண்டு வரிப் பாடல், சுதா சல்மானுக்கு I love you சொல்வது போல நடித்தது, பியூலா, சசிகலா இருவரும் ஜூனியரை ரேக்கிங் செய்வது போல நடித்தது... சசியின் பாட்டு.. கண்ணாடி தீபாவின் கவுண்டமணி ஜோக்.. கடலை குமாரின் கானாப்பாட்டு.. P.S.தீபாவின் சோகப்பாட்டு.. பாரதி அழகிப் போட்டியில் கலந்துகொண்டு அதில் முதல் பரிசு வாங்கினால் எப்படி REACT செய்வார்களோ அப்படி REACT செய்தது.. இப்படி பல விளையாட்டுக்களில் அரங்கமே அதிர்ந்தது...
உணவு இடைவேளையின் போது எனது வகுப்புத் தோழிகள் எனது விடுதி அறையை பார்க்க மிகவும் பிரியப்படவே நேரே வார்டனிடம் சென்று அனுமதி கேட்டேன். நாசுக்காய் மறுத்து விட்டார்..
மாலை 3.30 மணிக்கு கல்லூரியின் முதல்வர் திரு. தணிக்காசலம் வந்தார்.. பேசினார்.. ஒன்றும் உறுப்படியாய் இல்லை அவரது பேச்சு.. HOD NR SIR-தான் ”வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடனும்” என்கிற பாணியில் அசத்தும் அறிவுரைகள்.. சுபாஸ் சார் வழக்கம் போல சூப்பராய் பேசி அமர்ந்தார். ஏனோ இவரை எனக்கு எப்போதும் பிடிக்கும்.. பெரியசாமி சார் வழக்கமான புன்னகைப் பேச்சை உதிர்த்துவிட்டு போனார்.. அனைத்து பேராசிரியர்களும் பேசி முடித்தனர்..
VOTE OF THANKS நானும், சுதாவும்.. இதில் சுதா பஸ்சுக்கு நேரமாயிடுச்சு-னு சென்று விடவே, நானும் என் சகோதரி S.தீபாவும் நன்றி உரைத்தோம்.. அதுவும் ஒரு நிமிடம் கூட முன்கூட்டியே தயார் ஆகாமல்... நன்றாக பேசினோம் என்றும், மனதை வருடும் படி பேசியதாகவும் எங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் கிடைக்கத் தவறவில்லை..
எல்லாம் முடிந்தப் பின்பு மாடியில் ஒரே அலும்பு.. கட்டிட மணிக்கூண்டின் உச்சிக்கு ஏறினேன்.. தாவினேன்.. குதித்தேன்.. என் HOSTEL நண்பர்களுக்கு (மாடியில் இருந்து விடுதி சூப்பாராய் தெரிகிறது..?!) துடப்பத்தால் டாடா சொன்னேன்.. நிறைய போட்டோக்கள் எடுத்தோம்..
மாடியில் பட்டாசு வெடித்து ஒரே களேபரம்..
எப்போதும் இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த, ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த கட்டிட(எங்கள் வகுப்பறை முதல் தளம்) மேல்தளத்திற்கு இதுவரை யாரையும் அனுமதித்ததில்லை.. நான், கார்த்திக், குமார் மூவரும் இதற்கு சிறப்பு அனுமதியை எங்கள் துறையிடம் இருந்து பெற்றோம். (பிரிமிக்க என் கல்லூரி நண்பர்களே..அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில என்னிடமும் உள்ளன. அவற்றை இந்த இணையத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.. நீங்களும் உங்களிடம் உள்ள புகைப்படத்தை வழக்கம் போல kallurikalangkal@gmail.com -கு அனுப்பி வையுங்கள்..)
எல்லாமும் முடிந்தப் பின் கீலே வரும்போது மணி மாலை 5.35. மீண்டும் கடைசியாய் அனைவரின் முகத்தையும் பார்க்கிறேன்.. எல்லோரும் BYE சொல்லிவிட்டு ஒருவித மனச் சுமையோடு செல்வது தெரிகிறது.. என் தோழிகளின் கண்களில் நீர் திவளைகள்.. அனைவரையும் அனுப்பிவிட்டு நானும் மஹேந்திரனும், குமாரும், கார்திக்கை முல்லுவாடிகேட்டில் பஸ் எற்றிவிட்டபோது மணி மாலை 6.30.
மேற்கே அஸ்த்தமிக்கும் சூரியன் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு மறைகிறான்..
நான், மஹி, குமார் மூவரும் டவுன் பஸ்டாண்ட் நடக்கிறோம்.. குமாரையும் பஸ் எற்றிவிட்டாயிற்று.. ஏசு பிரார்த்தனைக் கூட்டம் நடக்கிறது.. திரும்புகிறோம்.. மணிக்கூண்டு 7.30 என்றது..
நானும், மஹியும் பேச மனமின்றி அமைதியாய் நடக்கிறோம்... பேருந்து நிலைய மைதானத்தில்(போஸ் மைதானம்) தரையில் அமர்கிறோம்.. வெறுமை எங்களை வதைப்பது உணர முடிந்தது..
விடுதி நோக்கி நடையிடுகிறோம்.. DCL வந்தடைந்தபோது நேரம் இரவு 9.30. மகியை பார்கிறேன்.. கண்களில் நீர்.. நடு சாலையில் என்னை அனைத்துக் ஆறுதல் கூறுகிறான் அவன்... பின் அவனது விடுதி நோக்கி நடக்கிறான்..
கல்லூரி வளாகத்தில் உள்ள எனது விடுதி நோக்கி நான் நடக்கிறேன்.. கால்கள் துவண்டன.. கல்லூரி வளாகத்தின் ஒவ்வொரு இடமும் ஒரு கதை சொன்னது.. இவ் வளாகத்தின் ஒவ்வொரு மண் துகளையும் ரசித்தவன் நான்.. பாசத்தோடு இதை நேசித்தவன் மட்டுமல்ல.. சுவாசித்தவனும் கூட...
GROUND-ல் நடக்கும்போது வழக்கமாய் என்னை பார்த்து குரைக்கும் நாய்கூட இன்று என்னை பரிதாபமாய் பார்த்ததாய் தோன்றுகிறது.. என் விடுதியை அடைகிறேன்.. என் அறை நோக்கி நடக்கிறேன்.. வழியில் மவுனகுமாரும் சுரேசும் ஏதோ சொல்கிறார்கள்.. காதில் ஒன்றும் விழவில்லை..
என் அறை திறந்து விவேகானந்தரின் முகத்தைப் பார்க்கிறேன்.. படுக்கை செல்கிறேன்.. ஓவென்று அழத்தோன்றியது.. தலையனையில் முகம் பதித்து அழுகிறேன்.. எவ்வளவு நேரம் இப்படி அழுதேன் எனத் தெரியாது.. எழுகிறேன்.. இதை எழுதி முடித்துவிட்டேன்.. உறக்கம் விரோதி ஆனது.. உறக்கத்திற்கு என்னை உட்படுத்தியாக வேண்டும்..
ஒன்று மட்டும் நிச்சயம்...
இத்தகைய கல்லூரிக் காலங்கள் கண்டிப்பாய் மறக்க முடியாதவை..
இங்கு அனுபவித்த ஒவ்வொரு நொடியும் இனி கிடைக்க இயலாதவை..
எனது கல்லூரிக் காலங்கள் கால சுழற்சியில் கரைந்து போகாதவை...
No comments:
Post a Comment